சுற்றுலா பயணிகளை தாக்கிய சம்பவம் – மேலும் 03 ஊழியர்கள் பணி இடைநிறுத்தம்
ரயிலில் பயணித்த இரு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ரயில்வே ஊழியர்கள் தாக்கிய சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி புகையிரத நிலையத்தின் மேலும் மூவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ரயில்வே திணைக்களத்தின் ஆறு அதிகாரிகளின் சேவைகளை இடைநிறுத்துவதற்கு ரயில்வே பொது முகாமையாளர் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற பொடி மெனிக்கே ரயிலில் குறித்த சுற்றுலாப் பயணிகள் இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டுகளுடன் முதல் வகுப்பில் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, சுற்றுலாப் பயணிகள் இருவரையும் நாவலப்பிட்டி ரயில் நிலைய ஊழியர்கள் தாக்கி, ரயிலில் இருந்து வெளியே இழுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
CATEGORIES பிரதான செய்தி