சர்வதேச கடற்பரப்பினை பாதுகாப்பதற்கு முன்னர் உள்நாட்டில் காணப்படும் பிரச்சினைகளிற்கு தீர்வு காணவேண்டும்!

சர்வதேச கடற்பரப்பினை பாதுகாப்பதற்கு முன்னர் உள்நாட்டில் காணப்படும் பிரச்சினைகளிற்கு தீர்வு காணவேண்டும்!

அரசாங்கம் சர்வதேச கடற்பரப்பினை பாதுகாப்பதற்கு முன்னர் உள்நாட்டில் காணப்படும் பிரச்சினைகளிற்கு தீர்வை காணவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் கருத்து வெளியிட்டுள்ளார்.

சர்வதேச கடற்பரப்பிற்கு கப்பலை அனுப்பும் அரசாங்கத்தின் தீர்மானத்தை விமர்சித்துள்ள அவர் உள்நாட்டில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

பொரளைதேவலாயத்தில் இரண்டு வருடங்களிற்கு முன்னர் கைக்குண்டு மீட்கப்பட்டதை குறிப்பதற்காக இடம்பெற்ற விசேட ஆராதனையின்போது இதனை தெரிவித்துள்ள அவர் இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும் கைக்குண்டினை வைத்த உண்மையான குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு அதிகாரிகள் தவறிவிட்டனர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறுதாக்குதல்களை மேற்கொண்டவர்கள் யார் ஊடகங்களை துன்புறுத்தியவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு அதிகாரிகள் தவறியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன்நிறுத்தப்படுவார்களா என்பதை பார்ப்பதற்காக நாங்கள் காத்திருக்கின்றோம் பிரகீத்எக்னலிகொடவின் கொலைக்கு யார் காரணம் என்பதும் லசந்தவை யார் கொலை செய்தார்கள் என்பதும் எவருக்கும் இதுவரை தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்தும் மூடிமறைக்கப்பட்டுள்ளது அதிகாரிகள் உள்நாட்டு பிரச்சினைகளிற்குதீர்வை காண்பதற்கு பதில் சர்வதேச கடற்பரப்பை பாதுகாப்பதற்கே முன்னுரிமை வழங்குகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2024ம் ஆண்டு தேர்தல்களி;ன் ஆண்டு என அறிகின்றோம் இந்த தடவை சரியான தலைவர்களிடம் மக்கள் ஆட்சியை வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This