“தேர்தல் பத்திரம்” விவரங்களை அளிக்க கால அவகாசம் கேட்கும் எஸ்.பி.ஐ. வங்கி
உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது என சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. மேலும், இந்திய தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரம் மூலமாக ஒவ்வொரு கட்சிகளும் பெற்றுள்ள தொகை குறித்த விவரத்தை அளிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் மார்ச் 31ஆம் திகதிக்குள் தனது இணைய தளத்தில் விவரத்தை வெளியிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது.
மேலும், தேர்தல் பத்திரம் வினியோகத்தை உடனடியாக நிறுத்தவும் எஸ்.பி.ஐ. வங்கிக்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்க்கட்சிகள் வரவேற்றன.
இந்த நிலையில் தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க ஜூன் 30-ந்தேதி வரை காலஅவகாசம் வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வேண்டுகோள் வைத்துள்ளது.
ஆனால், உச்சநீதிமன்றம் அதை ஏற்றுக் கொள்ளுமா? எனத் தெரியவில்லை. இந்தியாவில் கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரம் மூலம கட்சிகளுக்கு நிதி பெறுதல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.