நாட்டின் கல்வித் துறையின் வளர்ச்சிக்கு பணம் ஈட்ட பல வழிகள் காணப்படுகின்றன : சஜித்!

நாட்டின் கல்வித் துறையின் வளர்ச்சிக்கு பணம் ஈட்ட பல வழிகள் காணப்படுகின்றன : சஜித்!

புரட்சி செய்யப் போவதாகக் கூறிய புரட்சியாளர்களின் பயங்கரவாதத்தால் இந்நாட்டில் பல உயிர்கள் பலியாகின. வடக்கிலும் போலவே தெற்கிலும் பயங்கரவாதம் ஆட்கொண்டது.

நாட்டில் மீண்டும் இவ்வாறான அவலங்கள் உருவாக இடமளிக்கக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாடாக நாம் 90 பில்லியன் அமெ.டொலர் கடன் பட்டுள்ளோம், 2019 இல் செய்த தவறை மீண்டும் செய்யாதிருப்போம்.இந்த அரசாங்கம் எடுத்த முட்டாள்தனமான முடிவுகளால் நாடு நாசமடைந்தது.

மீண்டும் இவ்வாறானதொரு நாசகாரம் நடந்தால் நாட்டுக்கு என்னவாகும் என்பதை நினைத்துப் பார்க்க முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத் திட்டத்தின் 119 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், மொனராகல புத்தல, லுனுகல, யோதவெவ மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் இன்றைய (04) தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். நடன மற்றும் அரங்கேற்றங்கள் குழுவுக்குத் தேவையான அணிகலன்களைப் பெற்றுக் கொள்ள ஒரு இலட்சம் ரூபா நன்கொடையும் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

நாடு வங்குரோத்தானதால் கல்விக்காக மேலதிகமாக பணம் ஒதுக்க முடியாது என்று அரசாங்கம் கூறினாலும், நாட்டின் கல்வித் துறையின் வளர்ச்சிக்கு பணம் ஈட்ட பல வழிகள் காணப்படுகின்றன. அந்த முறைகளின் மூலம் தற்போதுள்ள கல்வி முறையை சிறந்த தரத்துடன் வழங்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். நமது நாட்டில் உள்ள ஒவ்வொரு பாடசாலையிலும் பல பாழடைந்த கட்டிடங்கள் உள்ளன. அந்த பாழடைந்த இடங்களை பராமரிக்க முடியாமையினால் புதிதாக நிர்மாணிப்பதற்குப் பதிலாக பராமரிப்பைப் போணுவதற்கும் திட்டம் காணப்பட வேண்டும். இதற்கு தேசிய வர்த்தகர்களையும், பரோபகாரர்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய கல்வி முறை தற்போதைய காலத்திற்கு ஏற்ற,தேசிய மற்றும் சர்வதேச தேவைப்பாடுகளை ஈடுகட்டும் போக்கில் அமையாதுள்ளதால், தற்போதுள்ள கல்வி முறைக்கு பதிலாக புதிய கல்வி முறையை நாட்டிற்கு அறிமுகப்படுத்துவது ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கமாகும். இந்த நேர்மறையான மாற்றம் ஏற்படுத்துவதைக் கொண்டு எமது நாட்டின் பாடசாலை மாணவர்கள் ஸ்மார்ட் குடிமக்களாக மாறுவார்கள் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஸ்மார்ட் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான முதல் படி, ஸ்மார்ட் மாணவனை உருவாக்குவதுதான்.ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொள்ளும் கல்வி சீர்திருத்தத்தில் ஆங்கில மொழிக் கல்விக்கு முன்னுரிமை வழங்கப்படும். 2024 ஆம் ஆண்டு தேர்தல் மக்களின் ஆசியுடன் நாட்டின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால் நாட்டில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் ஸ்மார்ட் பாடசாலைகளாக மாற்றப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This