இலங்கையில் நள்ளிரவு முதல் எரிபொருட்களின் புதிய விலை!

இலங்கையில் நள்ளிரவு முதல் எரிபொருட்களின் புதிய விலை!

இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் நேற்று (04-03-2024) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் திருத்தியுள்ளது.

இந்த நிலையில் , 92 ரக பெற்றோல், மற்றும் டீசலின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லையென தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, 95 ரக பெற்றோல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 447 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், சூப்பர் டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 458 ரூபாவாகும்.

அத்துடன், மண்ணெண்ணெயின் விலை லீற்றருக்கு 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 257 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This