யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!

யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் குறித்த வேலை திட்டம் இன்று (18) முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர், வடக்கு மாகாண பிரதி காவல்துறை மா அதிபர் ஆகியோரின் நேரடி பங்கேற்புடன் குறித்த டெங்கு ஒழிப்பு வேலை திட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொக்குவில் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சுகாதார அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விஜயம் மேற்கொண்டனர்.

மேலும், வீடுகளில் டெங்கு நுளம்பு காணப்படும் இடங்கள் அகற்றப்பட்டதோடு பல வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கைகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This