காஞ்சிபுரம் பட்டுப்புடவையில் நீட்டா அம்பானி; நடனமாடிய காணொளி வைரல்!

காஞ்சிபுரம் பட்டுப்புடவையில் நீட்டா அம்பானி; நடனமாடிய காணொளி வைரல்!

ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனரும், தலைமை நிர்வாகியுமான நீட்டா அம்பானி, தனது மகன் ஆனந்த் – ராதிகா திருமண நிகழ்வில், காஞ்சிபுரம் பட்டுப்புடவை அணிந்திருந்தது உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் ஜாம் நகரில் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழா நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்வில், ஏராளமான முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாட்டுப் பிரமுகர்களும் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிகழ்வில், நீட்டா அம்பானி, காஞ்சிபுரம் பட்டுப்புடவை அணிந்து, நடனமாடினார். தனது மகன் மற்றும் மருமகளின் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமையும் வகையில், மனதார வாழ்த்துவது போல, இப்பாடலும், நடனமும் அமைந்திருந்தது.

இதன் விடியோ எக்ஸ் வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

இந்த பாடலுக்கு அஜய் அதுல் இசையமைக்க, ஷ்ரேயா கோஷல் பாடியுள்ளார். நடனக் கலைஞர் வைபவ் மெர்சன்ட் நடன அசைவுகளை கவனிக்க, மணீஷ் மல்ஹோத்ரா நீட்டா அம்பானியின் ஆடை வடிவமைப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This