காசா மக்களுக்கு வான்வழியாக நிவாரணப் பொருட்கள் – அமெரிக்க ஜனாதிபதி

காசா மக்களுக்கு வான்வழியாக நிவாரணப் பொருட்கள் – அமெரிக்க ஜனாதிபதி

காசாவில் அமெரிக்க இராணுவம் வான்வழியாக உதவிப் பொருட்களை காசா மக்களுக்கு வழங்கும். மேலும் என்னென்ன வழிகள் இருக்கிறது. அவைகள் அனைத்தும் ஆராயப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஜோர்டான் மற்றும் சில நாடுகளுடன் இணைந்து இந்த பணியில் ஈடுபடப்போவதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

காசாவின் மேற்கு பகுதியில் நிவாரணப் பொருட்கள் வழங்க இஸ்ரேல் இராணுவம் சம்மதம் தெரிவித்தது. லொறிகளில் நிவாரணப் பொருட்கள் சென்றது. அப்போது லாரிகளை முற்றுகையிட்டு உணவுப் பொருட்களை வாங்க மக்கள் முண்டியடித்தனர்.

அப்போது பாதுகாப்பிற்கான நின்றிருந்த இஸ்ரேல் இராணுவத்தை நோக்கி மக்கள் வந்ததாகவும், தங்களுக்கு எதிராக தாக்குதல் மிரட்டல் என நம்பியதாகவும் கூறி கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதா இஸ்ரேல் இராணுவம் தெரிவித்தது. இதனால் 100-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இச்சம்பவத்திற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உடனடியாக போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தினர்.

CATEGORIES
TAGS
Share This