கிராமிய விருது வென்ற ஈரான் பாடகருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை!
இசை மற்றும் பாடலில் சிறந்த விளங்குபவர்களுக்கு உலகின் உயரிய விருதான கிராமிய விருது வழங்கி கவுரவிக்கப்படும். சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற இந்த விழாவில் ஈரான் பாடகர் ஷெர்வின் ஹஜிபோர் கிராமிய விருது வென்றார். அவருக்கு அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஜில் பைடன் விருது வழங்கி கவுரவித்தார்.
இந்த நிலையில் மாஷா அமினியின் உயிரழப்பால் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவாக அவரது பாடல் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவில் நீதிமன்றம் அவருக்கு 3.8 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
ஈரான் அரசின் நடைமுறைக்கு எதிரான பிரசாரம் மற்றும் மக்கள் போராட்டத்தை ஊக்கப்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது. பாடகர் ஷெர்வின் ஹஜிபோர் முறையான வருத்தம் தெரிவிக்காததால் இந்த தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு ஆண்டுகள் பயணத்தடை விதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவின் குற்றம் தொடர்பாக பாடல் உருவாக்க வேண்டும் எனவும், அவர்களின் குற்றம் குறித்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
ஈரான் அரசு ஹிஜாப் அணிவது தொடர்பாக கடுமையான சட்டத்தை கொண்டு வந்தது. மாஷா அமினி என்ற பெண்மணி ஹிஜாப் முறையாக அணியவில்லை என பொலீசார் கைது செய்தனர். போலீசார் தாக்கியதால் அவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து மிகப்பெரிய அளவில போராட்டம் வெடித்தது. இதற்கு ஆதரவாக பாடல் உருவாக்கியதால் பாடகருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்பு பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். ஹிஜாப் முறைப்படி அணியாத பெண்களை கைது செய்வதுதான் அவர்களுடைய பணியாகும்.