மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் பலி!
இந்தோனேஷியாவில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது கால்பந்து வீரர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், மைதானத்தில் தனியாக நின்று பந்தின் வருகைக்காக வீரர் ஒருவர் காத்துக் கொண்டிருந்தார். அவரிடம் பந்தை பாஸ் செய்ய மற்றொரு வீரர் ஆர்வமாக இருந்தார்.
அப்போது, தனியாக நின்று கொண்டிருந்த வீரரை மின்னல் தாக்கியது. இதில், அவர் கீழே விழுந்த நிலையில், அவர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், அவரை பரிசோதனை செய்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.