கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற மோதல்கள் குறித்த அறிக்கை!

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற மோதல்கள் குறித்த அறிக்கை!

பொலன்னறுவை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கடந்த வருடத்தில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் கைதிகள் தப்பிச் சென்றமை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நீதியமைச்சரால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று (01) அதன் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஹெக்டர் எஸ்.யாப்பாவினால் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நீதியமைச்சின் மேலதிக செயலாளர், குழுவின் உறுப்பினரான திரு.ரோஹன எஸ்.சபுகஸ்வத்த அவர்களும் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This