யாழில் விபத்து ; இளைஞன் பலி!

யாழில் விபத்து ; இளைஞன் பலி!

யாழ். கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும் அதே திசையில் பயணித்த துவிச்சக்கர வண்டியும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்வத்தில் 19 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி சாவகச்சேரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This