சாந்தனின் உடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில்!

சாந்தனின் உடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில்!

சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட சாந்தனின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அங்கு பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதுடன் அதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 28ஆம் திகதி சென்னையில் உயிரிழந்த சாந்தன் என்ற சுதேந்திர ராசாவின் சடலம் நேற்று முற்பகல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று முற்பகல் 11.35 அளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 122 என்ற விமானம் ஊடாக அவரது சடலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

எவ்வாறாயினும் அவரது சடலத்தை விடுவிப்பதற்கான ஆவணத்தில் பிரச்சினைகள் காணப்பட்டமையினால் நேற்று பிற்பகல் வரையில் சடலம் விடுவிக்கப்படவில்லை.

ஆவணங்கள் கிடைக்கப் பெற்றதன் பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய சாந்தன் என்ற சுதேந்திர ராசா சென்னையில் வைத்து கடந்த 28ஆம் திகதி காலமானார்.

CATEGORIES
TAGS
Share This