யாழில் விசர் நாய் கடித்து இளைஞன் பலி!

யாழில் விசர் நாய் கடித்து இளைஞன் பலி!

யாழ். ஆவரங்கால் பகுதியில் விசர் நாய் கடிக்கு உள்ளான இளைஞரொருவர் இன்று  (26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆவரங்கால் கிழக்கு புத்தூரைச் சேர்ந்த  பிரதாபன் ஷாலமன் என்ற 23 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் நாய் கடிக்கு உள்ளாகி இயலாமைக்குள்ளான குறித்த இளைஞன் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இளைஞன் இன்று உயிழந்துள்ளார்.

உடற்கூற்றுப் பரிசோதனையில் விசர்நாய் கடித்தே இளைஞன் உயிரிழந்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது

இந்நிலையில் குறித்த இளைஞனை கடித்த விசர்நாய் வேறு யாரையும் கடித்திருக்கலாம் என கருதப்படுவதால் அப்பகுதியில் அண்மையில் நாய்க் கடிக்கு உள்ளானோர் வைத்தியசாலை நாடுவதுடன், உயிரிழந்த இளைஞனுடன் பழகியவர்கள் வைத்தியசாலையை நாடுவது சிறந்தது என அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This