முள்ளியவளையில் நெக்டா நிறுவன ஊழியர் மீது தாக்குதல்!

முள்ளியவளையில் நெக்டா நிறுவன ஊழியர் மீது தாக்குதல்!

முள்ளியவளையில் நெக்டா நிறுவன ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

முள்ளியவளை முறிப்பு குளத்தில் தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளை பயன்படுத்தி கடற்றொழிலில் இரண்டு கடற்றொழிலாளர்கள் இன்று ஈடுபட்டுள்ளதை நெக்டா நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் அவதானித்துள்ளார்.

அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முற்பட்டவேளை, நெக்டா நிறுவன ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது, காயமடைந்த நெக்டா நிறுவன ஊழியர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This