சிறப்பு விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள சாந்தனின் பூதவுடல்!

சிறப்பு விமானம் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள சாந்தனின் பூதவுடல்!

சென்னையில் நேற்று முன்தினம் (28) உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் சிறப்பு விமானத்தின் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில,

”இன்றையதினம் சென்னையிலிருந்து காலை 9.40 மணிக்கு இலங்கை நோக்கி புறப்படும் சிறிலங்கன் எயார்லைன்ஸின் சிறப்பு விமானம் மூலம் சாந்தனின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.

இதேவேளை சாந்தனின் பூதவுடலை இலங்கைக்கு அனுப்புவதில் பெரும் சிக்கல்கள் காணப்பட்டன.

இதற்கான அனைத்து அனுமதிகளும் பெரும் சிரமத்தின் மத்தியில் நேற்று(29) பெற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த விமானத்தில் நானும் இலங்கை வரவிருக்கின்றேன். இதேவேளை மீண்டும் இந்தியா செல்வது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை.”‘என கூறியுள்ளார்.

அத்துடன் தமிழக அரசு சாந்தனின் பூதவுடலை கொண்டு செல்வதற்கான அனுமதிகளை பெற்றுக்கொள்வதற்கு ஒத்துழைப்பு மட்டுமே வழங்கியுள்ளது.

அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தனிப்பட்ட முறையில் சாந்தனின் குடும்பத்தாரால் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

CATEGORIES
TAGS
Share This