இன்றைய ராசிபலன் – 01.03.2024

இன்றைய ராசிபலன் – 01.03.2024

பொதுப்பலன்: திருமணம், வளைகாப்பு செய்ய, வங்கிகளில் சேமிப்புக் கணக்கு தொடங்க, கிரஹப்பிரவேசம் செய்ய, தங்க நகைகள் வாங்க, தானியத்தைக் களஞ்சியத்தில் வைக்க, விளையாட்டு, உடற்பயிற்சி சாதனங்கள் வாங்க, ஆலோசனை கூட்டங்கள் நடத்த நல்ல நாள். ராகுகாலத்தில் மாரியம்மன் கோயில்களில் அபிஷேக, அர்ச்சனைகள் செய்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் தடைகள் விலகும். மகாலட்சுமி அஷ்டோத்திரம், அன்னபூர்ணாஷ்டகம்,  தேவி கட்கமாலா ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம் ஆகியவற்றை படித்து வந்தால் எண்ணங்கள் நிறைவேறும்.

மேஷம்: குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்க்கப் பாருங்கள். எதிர்பாராத திடீர் பயணங்கள் இருக்கும். உத்தியோகத்தில் வேலைச்சுமை கூடும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகுவது நல்லது.

ரிஷபம்: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பழைய சொந்த – பந்தங்கள் உதவி கேட்டு வருவார்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும்.

மிதுனம்: வேலை தேடி அலைந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி தங்கும். வீட்டை அழகுப்படுத்துவீர். சமையலறை, படுக்கையறையை நவீனப்படுத்துவீர். பழைய வாகனம் செலவு வைக்கும்.

கடகம்: பேச்சில் ஒரு கம்பீரம் பிறக்கும். பழைய சொந்த பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். உங்களின் மாறுபட்ட அணுகு முறையை கண்டு எல்லோரும் அதிசயிப்பர். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும்.

சிம்மம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். அதற்கு தகுந்தாற்போல் சில முக்கிய பிரமுகர்கள் பக்கபலமாக இருப்பர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

கன்னி: தடைபட்ட சுப காரியங்கள் கை கூடிவரும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் நல்ல தீர்வு காண்பீர்கள். தாயாருக்கு இருந்த மருத்துவச் செலவு விலகும். வாகனப் பழுது நீங்கும்.

துலாம்: உறவினர், நண்பர்களிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். பயணங்கள் அலைச்சல் தரும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் உண்டு.

விருச்சிகம்: வீட்டில் உங்கள் கை ஓங்கும். குழப்பங்கள் நீங்கி கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். முகப்பொலிவு, ஆரோக்கியம் கூடும். அலுவலகத்தில் மதிப்பு கூடும்.

தனுசு: உங்களின் நிர்வாகத் திறன் கூடும். மேலதிகாரி உங்களை பற்றி பெருமையாக பேசுவார். பணவரவு உண்டு. பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.

மகரம்: வீண் குழப்பங்கள் விலகும். வீட்டில் நிம்மதி பிறக்கும். எதிர்பாராத பணவரவு இருக்கும். பழைய கடன் பிரச்சினையை தீர்க்க வழி பிறக்கும். சகோதர வகையில் சுபச் செலவு உண்டு. உடல்நலம் சீராகும்.

கும்பம்: முகப் பொலிவு கூடும். சோர்வு, களைப்பு நீங்கும். வீடு வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக நடந்து கொள்வர். சிலர் புது வாகனம் வாங்குவீர். வழக்குகள் சாதகமாகும்.

மீனம்: முன்கோபம், டென்ஷன் வரக்கூடும். ஈகோ பிரச்சினை தீர்ந்து, தம்பதிக்குள் நிம்மதி உண்டாகும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். யோகா, ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

CATEGORIES
TAGS
Share This