மைத்திரிக்கு வீடு வழங்க அமைச்சரவை எடுக்கப்பட்ட தீர்மானம் இரத்து!

மைத்திரிக்கு வீடு வழங்க அமைச்சரவை எடுக்கப்பட்ட தீர்மானம் இரத்து!

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த போது அவர் வசித்த கொழும்பு மஹகமசேகர மாவத்தையில் உள்ள வீட்டை அவர் ஓய்வு பெற்ற பின்னரும் அவருக்கே வழங்குவதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானம் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி, 2019 அக்டோபர் 15 ஆம் திகதி உரிய வீட்டை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தை செல்லாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாற்று கொள்கைகளுக்கான நிலைய பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் காமினி அமரசேகர மற்றும் குமுதுனி விக்கிரமசிங்க ஆகியோரின் இணக்கப்பாட்டுடன் உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியந்த ஜயவர்தன இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This