இன்றைய ராசிபலன் – 29.02.2024
பொதுப்பலன்: வாகனம் விற்க, கடன் தீர்க்க, சொத்து விவகாரங்கள் பேசி முடிக்க, வெற்றிலை பயிரிட, குழந்தைக்கு பெயர் சூட்ட, அன்னம் ஊட்ட, யோகா, தியானம் பயில, வாகனம், தங்க ஆபரணங்கள் வாங்க நல்ல நாள். குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டைகடலை மாலை அணிவித்தால் நன்மை உண்டு. நவக்கிரக குரு பகவானுக்கு அபிஷேக, அர்ச்சனை செய்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் தடைகள் விலகும். சித்தர் சமாதியில் தியானம் செய்வதாலும், விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பதாலும் மன அமைதி பெறலாம்.
மேஷம்: குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரியும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உடல் நிலை சீராக அமையும். வீண் அலைச்சல், டென்ஷன் குறையும்.https://d633ff54a3997c23fd7042d64acd6fd1.safeframe.googlesyndication.com/safeframe/1-0-40/html/container.html
ரிஷபம்: தடைபட்டுவந்த காரியங்கள் சுமுகமாக முடியும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். வியாபாரரீதியாக சில பிரபலங்களை சந்திக்க நேரும். பிள்ளைகளால் நிம்மதியுண்டு.
மிதுனம்: புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர்கள். பழைய நண்பர்கள், உறவினர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் உயரதிகாரியுடனான மனக் கசப்புகள் நீங்கும். வெளியூர் பயணங்களால் உற்சாகமடைவீர்கள்.
கடகம்: உங்களை சுற்றியிருப்பவர்களால் இருந்த தொல்லைகள் அகலும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வீட்டில் பழுதான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை மாற்றுவீர்கள். பழைய வாகனம் செலவு வைக்கும்.
சிம்மம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். முக்கிய பிரமுகர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்.
கன்னி: பணவரவு உண்டு. எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும். நல்லவர்களின் ஆதரவாலும், ஆலோசனையாலும் சிக்கல்களை முறியடித்து வெற்றி காண்பீர்கள்.
துலாம்: வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என சரி பார்த்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகள் தலை தூக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.
விருச்சிகம்: பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய நண்பர்களின் சந்திப்பு நிகழும். புதிய வீடு வாங்க கடனுதவி கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.
தனுசு: வீண் செலவுகளை தவிர்ப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உயரதிகாரிகளின் அன்பை பெறுவீர்கள். தாயாரின் உடல்நலம் சீராகும்.
மகரம்: வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் கிட்டும். தொண்டைப் புகைச்சல், வயிற்றுவலி விலகும். பணவரவு உண்டு.
கும்பம்: மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி கிட்டும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவர். புதிய பதவி கிடைத்து பொறுப்புகள் கூடும்.
மீனம்: மன இறுக்கம், குழப்பங்கள் வந்து போகும். நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து செயல்பட வேண்டும். வியாபாரத்தில் நிதானம் தேவை. உடல்சோர்வு ஏற்படும்.