இன்றைய ராசிபலன் – 17.02.2024

இன்றைய ராசிபலன் – 17.02.2024

பொதுப்பலன்: வாகனம் விற்க, கடன் பைசல் செய்ய, பழைய நண்பர்களை சந்திக்க, வீட்டை புதுப்பிக்க, பூர்வீகச் சொத்து விவகாரங்கள் பேச நல்ல நாள். கோயில்களில் தனி சந்நிதியில் அருள்பாலிக்கும் சனிபகவானுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து, எள் தீபம் ஏற்றி வழிபட்டால் காரியத் தடைகள் விலகும். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபடுவது நன்மை தரும். வெங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம், விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பதால் மன அமைதி கிடைக்கும்.

மேஷம்: வெளிவட்டாத்தில் மதிப்பு, மரியாதை கூடும். குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். வீட்டிலுள்ள பழைய பொருட்களை மாற்றுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

ரிஷபம்: திடீர் பயணம், ஆழ்ந்த உறக்கமின்மை வந்து செல்லும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். உடன் பிறந்தவர்களால் சங்கடங்கள் வந்து போகும். பிள்ளைகளின் படிப்பு விஷயமாக அலைச்சல் உண்டு.

மிதுனம்: உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்.

கடகம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர். சக ஊழியர்கள் ஆதரிப்பர். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும்.

சிம்மம்: மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பணவரவால் மன நிம்மதியுண்டு.

கன்னி: எடுத்த வேலையை முடிக்க, வேகத்தை கூட்டுவீர்கள். முக்கிய பிரமுகர்களின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். வாகனம் செலவு வைக்கும்.

துலாம்: தம்பதிக்குள் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். புதிய வாகனம் வாங்குவீர். வியாபாரத்தில் போராடி பழையபாக்கிகளை வசூலிப்பீர். அலுவலகத்தில் பணிச்சுமைகூடும். ஒருவித படபடப்பு வந்து செல்லும்.

விருச்சிகம்: உங்களின் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். பணவரவு உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். தந்தையின் உடல்நிலை சீராகும். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும்.

தனுசு: மறதியால் பிரச்சினை வந்து நீங்கும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். பழைய வழக்கு சாதகமாகும். சாலைகளை கவனமாக கடந்து செல்லவும். பிள்ளைகளின் வெற்றியால் மகிழ்ச்சி உண்டு.

மகரம்: நண்பர்கள் உதவுவார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு.

கும்பம்: அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தந்தைவழியில் ஆதாயம் உண்டு. முக்கிய பிரமுகர்கள், ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பர்.

மீனம்: கொடுக்கல் – வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல்கள் அதிகரிக்கும்.

CATEGORIES
TAGS
Share This