அனைத்து பாடசாலைகளுக்கும் அவசர அறிவித்தல்!

அனைத்து பாடசாலைகளுக்கும் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்ந்தும் தீவிரமடைந்து வரும் நிலையில், பாடசாலை மாணவர்களின் வெளிப்புற செயற்பாடுகளை தவிர்க்குமாறு அறிவித்தல் விடுத்துள்ளது.

அதன்படி, இன்று (28), நாளை (29) மற்றும் நாளை மறுதினமும் (01) ஆகிய மூன்று நாட்களுக்கும் இந்த அவசர நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், எந்தவொரு பாடசாலையிலும் பயிலும் மாணவர்கள் அதிக வெப்பநிலையின் போது வெளிப்புற விளையாட்டு பயிற்சி நடவடிக்கைகள் அல்லது விளையாட்டு நிகழ்வுகளிலும் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தவிரவும் வெப்பநிலை அதிகரித்து காணப்படுவதனால் வேறு எந்த வெளி நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவிக்குமாறு மாகாண மற்றும் பிராந்திய கல்வி அதிகாரிகளுக்கு ஏற்கனவே பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி, எதிர்காலத்தில் சுகாதார அமைச்சும், கல்வி அமைச்சும் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்பட வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This