20 ஆம் திகதி பாரிய தொழிற்சங்க நடவடிக்கை?

20 ஆம் திகதி பாரிய தொழிற்சங்க நடவடிக்கை?

ஆசிரியர் அதிபர்களின் சம்பள முரண்பாடு தொடர்பிலான பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகாணத் தவறினால் எதிர்வரும் 20 ஆம் திகதி மத்திய மாகாணத்தை மையமாகக் கொண்டு பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

கல்வித்துறையில் நிலவும் பிரச்சனைகள் தொடர்பாக நேற்று (16) அமைச்சர் சுசில் பிரேம்யந்த், மாகாண ஆளுநர்கள் மற்றும் கல்வி தொழிற்சங்கங்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சந்திப்பில் மாகாண கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன், ஆசிரியர் சம்பள முரண்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This