இந்திய கிரிக்கெட் வீரருக்கு எதிராக விசாரணை!

இந்திய கிரிக்கெட் வீரருக்கு எதிராக விசாரணை!

இந்திய கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரிக்கு எதிராக விசாரணை நடத்தவுள்ளதாக ஆந்திர கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

ரஞ்சி கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆந்திரா அணிக்காக ஹனுமா விஹாரி வெளியிட்ட கருத்தொன்று சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

குறித்த அணியின் தலைமை பதவியில் இருந்து தம்மை விலகுமாறு ஆந்திர கிரிக்கெட் சங்கம் வலியுறுத்தியதாக அவர் குற்றச்சாட்டியிருந்தார்.

எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் அணியின் ஏனைய வீரர்கள் மற்றும் போட்டி ஊழியர்கள் ஹனுமா விஹாரிக்கு எதிராக முறைப்பாடளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் இருதரப்பினருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதோடு விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This