தேவாலயத்தில் பயங்கரவாத தாக்குதல் – 15 பேர் பலி!

தேவாலயத்தில் பயங்கரவாத தாக்குதல் – 15 பேர் பலி!

தேவாலயம் ஒன்றில் சிறப்புப் பிரார்த்தனைக்காகப் பொதுமக்கள் ஒன்று கூடிய நிலையில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்தனர்.

மேற்கு ஆப்பிரிக்கப் பகுதியில் உள்ள நாடு புர்கினா பாசோ, கடந்த பல ஆண்டுகளாகவே இந்த நாட்டில் உள்ளூர் மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது.

வடக்கு புர்கினா பாசோவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை நடந்த பிரார்த்தனையின் போது
திடீரென துப்பாக்கி ஏந்திய ஒரு கும்பல் தேவாலயத்திற்குள் நுழைந்து அங்கு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர்.

இந்த “பயங்கரவாத” தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகத் தேவாலயத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உள்ளூர் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரார்த்தனைக்காகக் கூடியிருந்த எஸ்ஸகனே கிராமத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்திலேயே இந்த பயங்கரவாதத் தாக்குதல் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே புர்கினா பாசோவில் அமைதி திரும்ப வேண்டும் என உள்ளூர் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ள நிலையில், சிலர் திட்டமிட்டு தங்கள் பகுதியை நாசம் செய்ய இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த பகுதியில் செயல்பாடும் ஜிஹாதிக் பயங்கரவாதிகள் இதுபோன்ற தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், தேவாலயத்தின் மீதான இந்தத் தாக்குதலை அந்த பயங்கரவாத குழு நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This