கலாநிதி சாந்தி கேசவன் பேராசிரியராக பதவி உயர்வு!

கலாநிதி சாந்தி கேசவன் பேராசிரியராக பதவி உயர்வு!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் இந்துநாகரீகத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சாந்தி கேசவன் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர், இந்து நாகரீகத்துறை கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் விரிவுரையாளராக கடமையாற்றி வருகின்றார்.

பல நூல்களையும், ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ள இவர், தேசிய, சர்வதேச மாநாடுகளிலும் பங்கு பற்றி ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார்.

மேலும் குறித்த துறையின் தலைவராக இருதடவை பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவரிடம் கற்ற மாணவர்கள் விரிவுரையாளர்களவும், துறைத்தலைவர்களாகவும், பீடாதிபதிகளாகவும் பதவி வகிக்கின்றமை எடுத்துக்காட்டத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This