பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்குதல்!

பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்குதல்!

பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலக முறைசாராக்கல்விப்பிரிவின் ஒழுங்கு படுத்தலில் களுதாவளை சமுக பொருளாதார அபிவித்திச்சங்கம் (SEEDA) கட்டாரில் தொழில் புரியும் உற வுகளின் பிரதான அனுசரணையில் வருடா வருடம் பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களை அந் நிலையிலிருந்து மீட்டு இடைவிலகலைத் தவிர்த்து தொடர்கல்வியை பெறுவதற்காக கற்றல் உபகரணங்களை வழங்குகின்ற நிகழ்வின் முதல் கட்டம் மட்/பட்/பட்டிருப்பு ம.வி (தே.பா) முறைசாராக்கல்வி இணைப்பாளர் றீற்றா கலைச்செல்வனின் ஏற்பாட்டில் பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் தலமையில் நடைபெற்றது.

இதில் பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்விப்பணிப்பாளர் (மாணவர் அபிவிருத்தி) இ.ஜுவானந்தராசா, சீடா அமைப்பின் தலைவர் க.கிசோபன், சீடா அமைப்பின் உறுப்பினர்கள், பட்டருப்பு கல்வி வலயத்தின் ம.தெ.எ.ப. கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள், முறைசாராக்கல்வி உத்தியோகத்தர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், வளவாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். பட்டிருப்பு வலயத்தின் ம.தெ.எ.ப கோட்டத்திற்குட்பட்ட 19 பாடசாலைகளின் 475 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், இரண்டாம் கட்டம் 16.02.2023 அன்று 350 மாணவர்களுக்கும், 3ம் கட்டமாக போரதீவுப்பற்றுக் கோட்டத்திலுள்ள 33 பாடசாலைகளின் 677 மாணவர்களுக்கும் என 1502 மேற்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

CATEGORIES
TAGS
Share This