துபாய் இரவு விடுதியில் மோதல்: 13 இலங்கையர்கள் கைது!

துபாய் இரவு விடுதியில் மோதல்: 13 இலங்கையர்கள் கைது!

பெலியத்தவில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு ஆதரவளித்தார்கள் எனக் கூறப்படும் உரகஹ மைக்கல், பௌஸ் ஹர்ஷா ஆகியோரும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இருவரும் துபாய் நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துபாயில் உள்ள ஒரு இரவு விடுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் குறித்த நால்வர் உட்பட 13 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட 13 பேரும் பெலியத்தவில் ஐவரின் படுகொலைகளுக்கு தலைமை தாங்கியதாக சந்தேகிக்கப்படும் கொஸ்கொட சுஜீயின் நெருங்கிய உறவினர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This