யாழ் சிறையில் உள்ள தமிழக கடற்தொழிலாளர்களை சந்தித்த ஜீவன்!

யாழ் சிறையில் உள்ள தமிழக கடற்தொழிலாளர்களை சந்தித்த ஜீவன்!

கடற்தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் நிலையானதொரு தீர்வை காணுமாறு இந்திய அரசிடமும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள 43 தமிழக கடற்தொழிலாளர்களை அமைச்சர் நேரில் சென்று சந்தித்து அவர்களிடம் சுகம் விசாரித்ததுடன், அவர்களுக்குள்ள பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டார்.

தமிழக கடற்தொழிலாளர்கள் ரோலர் படகுகளைப் பயன்படுத்தி அதிகளவான மீன்களை பிடிக்கின்றனர், இலங்கை கடல் வளமும் சேதமடைகின்றது. இது கடல்சார் சட்டங்களையும் மீறும் செயலாகும். கடற்தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுமாறு இந்திய அரசிடமும், இலங்கை ஜனாதிபதியிடமும் நாம் கோரிக்கை முன்வைத்துள்ளோம் என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This