மட்டக்களப்பில் வாகன விபத்து ; ஒருவர் பலி!

மட்டக்களப்பில் வாகன விபத்து ; ஒருவர் பலி!

மட்டக்களப்பு – தன்னாமுனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றினால் ஒருவர் உயரிழந்துள்ளார்.

குறித்த விபத்தானது, நேற்று(16) இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு – தன்னாமுனை பிரதான வீதியில் முச்சக்கரவண்டியொன்றும் டிப்பர் ரக வாகனமொன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

அத்தோடு, குழந்தை, பெண் உட்பட 3 பேர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், விபத்துக்குள்ளான EP YM 9230 எனும் இலக்க முச்சக்கர வண்டி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு செல்லுமாறு அவசர கோரிக்கையொன்றும் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This