மட்டக்களப்பில் இரத்ததான முகாம்!

மட்டக்களப்பில் இரத்ததான முகாம்!

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நாட்டின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் திங்கட்கிழமை (05) வெல்லாவெளியில் அமைந்துள்ள போரதீவுப் பற்றுப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இக் கொடை முகாமில் பிரதேச செயலக செயலக நிருவாக உத்தியோகத்தர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், அலுவலக உத்தியோகத்தர்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This