புதிய இணைய வழிச் சட்டம் தொடர்பான சர்ச்சைகளை நிவர்த்தி செய்யுமாறு அமெரிக்கா அழுத்தம்!

புதிய இணைய வழிச் சட்டம் தொடர்பான சர்ச்சைகளை நிவர்த்தி செய்யுமாறு அமெரிக்கா அழுத்தம்!

தொழிநுட்ப நிறுவனங்களை கவலைக்குள்ளாக்கியுள்ள புதிய இணைய வழிச் சட்டம் தொடர்பான சர்ச்சைகளை நிவர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

யு.எஸ்.எய்ட் என்ற சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் தலைவரான சமந்தா பவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைக் காணொளி ஊடாக இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மைய ஆண்டுகளில் சீனாவின் நெருங்கிய பங்காளியான இலங்கையில் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள உதவுவதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துச் சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடலுக்கான தங்களது ஆதரவை சமந்தா பவர் வெளிப்படுத்தியதாக யு.எஸ்.எய்ட் அமைப்பு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இணையவழி பாதுகாப்பு சட்டத்தை திருத்தம் செய்வதற்கு சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைஞர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This