பொலிஸ் ஏ.எஸ்.பி.யை கடத்திய கும்பல்: துப்பாக்கிகளை கீழே வைத்து மணிப்பூர் பொலிஸ் போராட்டம்!

பொலிஸ் ஏ.எஸ்.பி.யை கடத்திய கும்பல்: துப்பாக்கிகளை கீழே வைத்து மணிப்பூர் பொலிஸ் போராட்டம்!

மணிப்பூர் மாநிலம் கிழக்கு இம்பால் பகுதியில் நேற்று ஆயுதங்களுடன் வந்த 200 பேர் கொண்ட கும்பல், போலீஸ் ஏ.எஸ்.பி. மொய்ரங்தம் அமித் சிங்கின் வீட்டை சூறையாடி, அவரையும் அவரது பாதுகாவலரை கடத்திச் சென்றுள்ளது.

இதனால் கோபமடைந்த காவல்துறையினர், இதனைக் கண்டித்து, தங்களது துப்பாக்கி ஆயுதங்களை கீழே வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

அதன் பின்னர் கடத்தப்பட்ட பொலிஸ் ஏ.எஸ்.பி. மொய்ரங்தம் அமித் சிங்கையும், அவரது பாதுகாவலரையும் காவல்துறையினர் மீட்டனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This