செந்தில் பாலாஜி பிணை மனு – இன்றும் தொடரும் விசாரணை

செந்தில் பாலாஜி பிணை மனு – இன்றும் தொடரும் விசாரணை

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் வழங்க கோரி 2ஆவது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்கு செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் சி. ஆர்யமா சுந்தரம் ஆஜராகி வாதிட்டார். தன் வாதத்தில், “செந்தில் பாலாஜி தற்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார், இதனால் வழக்கில் சூழ்நிலைகள் மாறிவிட்டன.”

“மேலும் செந்தில் பாலாஜிக்கு எதிரான இந்த வழக்கில் பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை அமலாக்கத்துறை திருத்தியுள்ளது. இதனை விசாரணையின் போது தான் நீரூபிக்க முடியும்,” என்று தெரிவித்து இருந்தார்.

இவர் கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்து அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் தனது வாதத்தில், “இந்த வழக்கில் எந்த டிஜிட்டல் ஆதாரங்களையும் அமலாக்கத்துறை திருத்தவில்லை. அனைத்து ஆதாரங்களும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து பெறப்பட்டவை,” என்று தெரிவித்தார். இந்த வழக்கில் அமலாக்கத்துறையின் தொடர் வாதத்துக்காக இன்று விசாரிப்பதாக உத்தரவிட்டிருந்தார்.

CATEGORIES
TAGS
Share This