இன்றைய ராசிபலன் – 15.02.2024
பொதுப்பலன்: வாகனம் விற்க, வங்கிக் கடனுக்கு முயற்சிக்க, யோகா, தியானம் பயில, வேலி மற்றும் மதில்சுவர் அமைக்க நல்ல நாள். நவக்கிரக குரு பகவானுக்கு அபிஷேக, அர்ச்சனைகள் செய்து, கொண்டைகடலை மாலை அணிவித்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதால் காரியத் தடை விலகும். விஷ்ணு சஹஸ்ரநாமம், வெங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம் படிப்பதால் வறுமை, மனக்கஷ்டம் நீங்கி அனைத்து நலன்களும் கிட்டும். குருநாதராக இருக்கும் சித்தர் சமாதியில் வழிபாடு செய்வது நன்மை அளிக்கும்.
மேஷம்: பணப் பற்றாக்குறை, வீண் டென்ஷன் ஏற்படும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்க வாய்ப்புண்டு.
ரிஷபம்: பிரபலங்களின் சந்திப்பு நிகழும். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். மனைவிவழி, தாய்வழி உறவினர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். வீட்டை அலங்கரிப்பீர்கள்.
மிதுனம்: எதிர்பாராத செலவுகள் வந்தாலும் அவற்றை சமாளிக்கும் அளவுக்கு பணவரவு உண்டு. பேச்சுத் திறமையால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஆதரவாக இருப்பர்.
கடகம்: நீண்ட நாளாக பேசாமல் இருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்.
சிம்மம்: சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். விரும்பிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பழகவும்.
கன்னி: எதிர்மறை சிந்தனை, ஏமாற்றங்கள் வரக்கூடும். குடும்பத்தில் மூத்தவர்களின் ஆலோசனையை கேட்பது நல்லது. வாகனத்தை கவனமாக இயக்கவும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.
துலாம்: குடும்பத்தாருடன் கலந்து பேசி, பிள்ளைகளின் படிப்பு குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர். சகோதரர்களால் பயனடைவீர்கள். வியாபாரம் அதிக லாபம் தரும்.
விருச்சிகம்: கணவன் – மனைவிக்குள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.
தனுசு: தொலை நோக்குச் சிந்தனையுடன் செயல்பட்டு சில பிரச்சினைகளை முடிப்பீர்கள். தம்பதிக்குள் இருந்து வந்த சந்தேகம் விலகி அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் அன்பாக நடந்து கொள்வர்.
மகரம்: எதிர்பாராத பயணங்களால் ஆதாயமுண்டு. அழகு, இளமை கூடும். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். கணவன் – மனைவிக்குள் இருந்த பிரச்சினை விலகும்.
கும்பம்: சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து செயல்படுவீர்கள். முக்கியபிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். நவீன மின்னணு சாதனம் வாங்குவீர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி ஏற்பாடாகும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும்.
மீனம்: மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்பத்தில் உங்கள் கைஓங்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.