இன்றைய ராசிபலன் – 07.02.2024

இன்றைய ராசிபலன் – 07.02.2024

பொதுப்பலன்: விவாதங்களில் கலந்து கொள்ள, மருந்து தயாரிக்க, புத்தகங்கள் வெளியிட, மூலிகை பறிக்க நல்ல நாள். முருகப் பெருமான், துர்கை வழிபாடு சிறந்த பலன்களைத் தரும். நவக்கிரக செவ்வாய்க்கு ராகுகாலத்தில் நெய் விளக்கேற்றி வழிபடவும். செவ்வாய் பகவானுக்கு சிவப்பு நிற வஸ்திரம் சாற்றி, செந்நிற மலர்களால் அர்ச்சனை செய்தால், தடைகள் நீங்கி அனைத்திலும் வெற்றி கிடைக்கும். மகாலட்சுமி அஷ்டக ஸ்தோத்திரம், தேவி ஸ்துதி படிப்பதால் மன நிம்மதி உண்டாகும்.

மேஷம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் மனநிறைவு கிட்டும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரத்தில் லாபம் உண்டு. மாணவர்களின் நீண்ட நாள் கனவு நனவாகும்.

ரிஷபம்: யாரையும் விமர்சித்துப் பேச வேண்டாம். பிள்ளைகளால் பொருட் செலவு வரும். வியாபாரத்தில் திடீர் முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். வாகனம் பழுதாகும். அண்டை வீட்டாருடன் அளவாக பழகுவது நல்லது.

மிதுனம்: நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். மகனின் கல்யாண பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்.

கடகம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பான அலைச்சல் உண்டு.

சிம்மம்: உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பர். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்து வீர். முக்கிய பிரமுகர்களுடன் திடீர் சந்திப்பு நிகழும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்.

கன்னி: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகள் அன்பாக நடந்து கொள்வர். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். தாயாரின் உடல்நலனில் முன்னேற்றம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்த முயல்வீர்.

துலாம்: உத்தியோகத்தில் மேலதிகாரிகள் முக்கிய பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பர். வீட்டில் விருந்தினர்களின் வருகையுண்டு. மாணவர்களின் கவனம் படிப்பில் திரும்பும். வாகனப் பழுது நீங்கும்.

விருச்சிகம்: பழைய சொத்துப் பிரச்சினைகளை இப்போது கையிலெடுக்க வேண்டாம். குடும்பத்தில் கூச்சல், குழப்பங்கள் நிகழும். நண்பர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தும் வகையில் நடந்து கொள்வார்கள்.

தனுசு: குடும்பத்தினரின் ஆதரவு உண்டு. வாகனம் செலவு வைக்கும். பிள்ளைகளிடம் அன்பாக பேசுவது நல்லது. வாயுக் கோளாறால் நெஞ்சு வலி வந்து போகும். உணவில் கட்டுப்பாடு அவசியம். தியானம் செய்யவும்.

மகரம்: எதார்த்தமான வார்த்தைகளால் சிலரை கவருவீர். பழைய கடனை பைசல் செய்வீர். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

கும்பம்: பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகளை பேசித் தீர்க்க வழி பிறக்கும். பணப் பற்றாக்குறை விலகும். குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபாடு செய்வீர்கள். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டு.

மீனம்: கணவன் – மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி, சந்தோஷம் நிலைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் எளிதாக முடியும். வீட்டை கலைப் பொருட்களால் அலங்கரிப்பீர்.

CATEGORIES
TAGS
Share This