இன்றைய ராசிபலன் – 17.01.2024

இன்றைய ராசிபலன் – 17.01.2024

மேஷம்: வீட்டில் பழுதடைந்த மின்னணு, மின்சார சாதனங் களை மாற்றுவீர். பிரச்சினை எதுவானாலும் சமாளிக்கும் மன வலிமை கூடும். தாய்வழி உறவினர்களின் வருகையுண்டு. பணவரவு திருப்தி தரும்.

ரிஷபம்: எதையும் சாதித்துவிடலாம் என்ற எண்ணம் வரும். முக்கிய பிரமுகர்கள் சிலரின் அறிமுகம் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவு உண்டு. மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள்.

மிதுனம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் சந்தோஷம் தங்கும். தொழிலதிபர்கள் அறிமுகமா வார்கள். வங்கிக் கடனுதவி கிட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வரவேண்டிய பணம் வரும்.

கடகம்: வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உயரதிகாரிகளின் அன்பை பெறுவீர்கள். உடல்நலம் சீராகும்.

சிம்மம்: சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். பிள்ளை களால் பெருமையடைவீர்கள். அநாவசியமாக யாருக் காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.

கன்னி: அடிமனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்று தீரும். தாயாரின் உடல்நலம் சீராகும். தடைகள் உடைபட்டு வெற்றி கிடைக்கும்.

துலாம்: முடியாது என்றிருந்த வேலையை முடித்துக் காட்டுவீர்கள். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. விஐபிகளால் பாராட்டப்படுவீர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

விருச்சிகம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். அதற்கு தகுந்தாற்போல சில விஐபிகளும் பக்கபலமாக இருப்பார்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி ஏற்பாடாகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். புதிய வீடு வாங்குவீர்.

தனுசு: வீண் அலைச்சல் நீங்கும். தடைகள் விலகி, இலக்கை நோக்கி முன்னேறுவீர். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவிகரமாக இருப்பார்கள். நெருக்கமான வர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பீர்கள்.

மகரம்: புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர்கள். பழைய உறவினர்கள் தேடி வருவர். அலுவலகத்தில் உயரதிகாரியுடனான மனக் கசப்புகள் நீங்கும். வெளி யூர் பயணங்களால், சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்.

கும்பம்: பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். வழக்குகள் சாதகமாகும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய நண்பர்களின் சந்திப்பு நிகழும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

மீனம்: யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். பழைய வழக்கில் முன்னேற்றம் உண்டு.

CATEGORIES
TAGS
Share This