ஜனாதிபதி நிதியத்தின் புதிய இணையத்தளம் அறிமுகம்!

ஜனாதிபதி நிதியத்தின் புதிய இணையத்தளம் அறிமுகம்!

ஜனாதிபதி நிதியத்தின் புதிய இணையத்தளம் (https://www.presidentsfund.gov.lk) செவ்வாய்க்கிழமை (13) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் மூலம், ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான புதிய தகவல்களை மும்மொழிகளிலும் பொதுமக்கள் பெறமுடிவதுடன், மருத்துவ உதவி பெறுவது தொடர்பான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யும் வசதியும் உள்ளது.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான சரத் குமார, ஜனாதிபதி நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் கயான் மொரலியகே மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் உதவிப் பணிப்பாளர் டபிள்யூ.டி.எம்.பொதேஜு ஆகியோர் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This