நயினாதீவில் பெருந்தொகையான போதைப்பொருட்கள் மீட்பு!

நயினாதீவில் பெருந்தொகையான போதைப்பொருட்கள் மீட்பு!

யாழ். நயினாதீவு பகுதியில் 20 கிலோ மற்றும் 140 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் நேற்று (13) காலை இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,இந்த நடவடிக்கை நயினாதீவு கடற்கரையில் கஞ்சா இருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமையவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு கடற்படையுடன் இணைந்து விரைந்த விசேட அதிரடிப் படையினர் 20 கிலோகிராம் மற்றும் 140 கிராம் கஞ்சாவினை கைப்பற்றி உள்ளனர்.

இதனையடுத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

CATEGORIES
TAGS
Share This