கொள்கை மாறி செயற்படும் ஜனாதிபதி – சாணக்கியன்

கொள்கை மாறி செயற்படும் ஜனாதிபதி – சாணக்கியன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சி அதிகாரத்துக்கு வரும் முன் ஒரு நபராகவும் வந்த பின் வேறொரு நபராகவும் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் குற்றம் சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பில் இன்று (01) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“ஆட்சி அதிகாரம் தன் வசம் இல்லாத போது ஜனாதிபதியின் சிந்தனைகள் அனைத்தும் ஜனநாயகம், இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் ஊடக சுதந்திரம் பற்றியே இருந்தது.

அவ்வாறு சிந்தித்த ரணிலின் அரசாங்கத்திலேயே இன்று நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This