இன்றைய ராசிபலன் – 14.02.2024

இன்றைய ராசிபலன் – 14.02.2024

பொதுப்பலன்: வழக்கு விவகாரங்கள், கடன் பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க, இசைக் கருவிகள், மின்சார சாதனங்கள்,
விவசாயக் கருவிகள் வாங்க, கொட்டகை, சுற்றுச் சுவர் அமைக்க, உடற்பயிற்சி சாதனங்கள் வாங்க நன்று. விநாயகப் பெருமானை வணங்க மிகச் சிறந்த நாள். எந்தவொரு சுப காரியத்தையும் தொடங்குவதற்கு முன், முதல் கடவுளான விநாயகரை வணங்கி தொடங்கினால் வெற்றி கிட்டும்.

மேஷம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அலைச்சல், உடல்சோர்வு வரக்கூடும். வாகனத்தை இயக்கும்போது செல்போனை பயன்படுத்தாதீர்கள். பணவரவு சீராக இருக்கும்.

ரிஷபம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் வீண் குழப்பங்கள் விலகும். மாணவ-மாணவியர் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள்.

மிதுனம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். தாயாருக்கு உடல்நிலை சீராகும். உறவினர்கள், நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.

கடகம்: கணவன் – மனைவிக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

சிம்மம்: அடுத்தடுத்த செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடுவதால் பிரச்சினைகள் வரக் கூடும். தங்க ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள். எதிலும் நிதானம் தேவை.

கன்னி: சாதுர்யமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் வீண் டென்ஷன் நீங்கும்.

துலாம்: கடந்தகால இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். மனதில் நிம்மதி பிறக்கும். கலைப்பொருட்கள் சேரும். வெளிவட்டாரத்தில் பெரிய பொறுப்புகளை உங்களை நம்பி ஒப்படைப்பார்கள்.

விருச்சிகம்: சுபநிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.

தனுசு: வீண்செலவுகளைத் தவிர்த்து விடுவீர்கள். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த ஆலோசனை செய்வீர்கள். வியாபாரரீதியாக புதிய நபர்களைச் சந்திப்பீர்கள்.

மகரம்: அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். குழந்தைக்கு உடல்நிலை சீராகும். யோகா, தியானம் என மனம் செல்லும். தாய்வழி உறவினர்களால் ஆதாயமுண்டு. திடீர் பயணம் ஏற்படும்.

கும்பம்: மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும்.

மீனம்: மனச் சோர்வுடன் காணப்படுவீர்கள். அடுத்தவர்களைக் குறைகூறுவதை நிறுத்துங்கள். மாலை முதல் மகிழ்ச்சிகரமான சூழல் ஏற்படும். மூத்த சகோதரரால் சில காரியங்கள் நிறைவேறும்.

CATEGORIES
TAGS
Share This