ஐபோனை திருடி ஆயிரம் ரூபாய்க்கு விற்ற யாசகர்!

ஐபோனை திருடி ஆயிரம் ரூபாய்க்கு விற்ற யாசகர்!

யாசகர் ஒருவர் ஐ போன் ஒன்றை திருடி அதனை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவமொன்று வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை பகுதியில் நேற்று (12) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

யாசகம் கேட்டு வந்த முதியவர் ஒருவர் வீடு ஒன்றிலிருந்த பெறுமதி வாய்ந்த ஐ போன் ஒன்றை திருடிச் சென்றுள்ளார். இவ்வாறு திருடிச் சென்ற நபரின் புகைப்படத்தை சி.சி.ரி.வியின் உதவியுடன் முகநூலில் பதிவிட்டதன் பின்னர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர் வசமாக சிக்கியுள்ளார்.

திருடிய கைபேசியை ஆயிரம் ரூபாய்க்கு விற்பன செய்த அந்நபர் அந்தப் பணத்தில் மது அருந்திக் கொண்டிருந்த நிலையில் அவர் பிடிபட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This