EPAPER
இலங்கையில் மீண்டும் முட்டை விலை அதிகரிக்க வாய்ப்பு?

இலங்கையில் மீண்டும் முட்டை விலை அதிகரிக்க வாய்ப்பு?

இந்த ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட 7 மில்லியன் முட்டைகள் லங்கா சதொச சிறப்பங்காடிகளுக்கு எதிர்வரும் வாரத்தில் விநியோகிக்கப்படவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

பண்டிகை காலம் நெருங்கி வருவதனால் சந்தையில், முட்டைகளின் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது, சதொச சிறப்பங்காடிகளிலும், சில்லறை வர்த்தக நிலையங்களிலும் முட்டைகளை பெற்றுக்கொள்ள முடிவதில்லை என நுகர்வோர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This