வெற்றியை கொண்டாடுமாறு இம்ரான் கான் அறிவிப்பு!

வெற்றியை கொண்டாடுமாறு இம்ரான் கான் அறிவிப்பு!

பாகிஸ்தானின் 12ஆவது பொதுத் தேர்தல் வெற்றியை கொண்டாடுமாறு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனது ஆதரவாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

இன்று (10) காலை நிலவரப்படி அந்நாட்டின் 266 ஆசனங்களில் 99 இடங்களை இம்ரான் கானின் பி.டி. ஐ கட்சி வெற்றி பெற்றுள்ளது, அவரை எதிர்த்து போட்டியிட்ட நவாஸ் ஷெரீப்பின் கட்சி 71 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை அமைக்க 133 இடங்களை கைப்பற்ற வேண்டும்.

இந்தநிலையில் சிறையில் இருக்கும் இம்ரான் கான் தனது ‘x’ கணக்கு மூலம் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த X பதிவில் எமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது எனவும் 2024 தேர்தல் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உங்கள் வாக்களிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்’’ என அவர் தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This