சாதாரண தர – உயர்தர பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு!

சாதாரண தர – உயர்தர பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு!

2023ஆம் கல்வி ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை எதிர்வரும் மே – ஜூன் மாதங்களில் இடம்பெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணை ஜனவரி 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This