அத்தை, மாமாவின் மகள், மகனை திருமணம் செய்யத் தடை!

அத்தை, மாமாவின் மகள், மகனை திருமணம் செய்யத் தடை!

உத்தரகண்ட் மாநிலத்தில் அத்தை, மாமனின் மகன் அல்லது மகளை திருமணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஒவ்வொரு மதத்திலும் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசுரிமை ஆகியவற்றில் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

அதற்குப் பதிலாக அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தைப் பின்பற்ற வழியமைக்கும் ‘பொது சிவில் சட்டத்தை’ நாடு முழுமைக்கும் கொண்டுவர மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது.

இந்த நிலையில், நாட்டில் முதல் மாநிலமாக உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின்படி, பலதார திருமணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மறுமணம், விவாகரத்து குறித்த பொது விதிகளை அமல்படுத்தியுள்ளது.

அதேபோல், திருமணங்களைப் போன்று, லிவ்-இன் உறவில் இருக்க விரும்புவோரும் அரசிடம் பதிவு செய்து கொள்வது கட்டாயாமாக்கப்பட்டுள்ளது. தவறுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, திருமணம் செய்ய தடை விதிக்கப்பட்ட உறவுகள் என்ற பிரிவில், தந்தை சகோதரியின் மகன்மகள் மற்றும் தாய் சகோதரரின் மகன்மகள் என்ற உறவுமுறையும் இடம்பெற்றுள்ளது.

CATEGORIES
TAGS
Share This