அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றார் – நளின் பண்டார

அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றார் – நளின் பண்டார

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க, சமூக வலைத்தளங்களின் ஊடாகவே நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்று விட்டார் என குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மாநாடு பெப்ரவரி (17) கண்டியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த மாநாட்டிற்காக நாவலப்பிட்டி பிரதேச பெண்களை அழைக்கும் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, சமூக ஊடகங்களின்படி, நாட்டின் பெரும்பான்மையான மக்கள், தேசிய மக்கள் சக்தியை சுற்றி ஒன்றுபடவில்லை, சில பகுதிகளில், தேசிய மக்கள் சக்தியை சுற்றி குழுவொன்று ஒன்று சேர்ந்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய பெருமளவானோர், பிளவுபட்டு மாற்றுக் கட்சிகளுக்கு செல்கின்றனர். இவ்வாறு பிளவுபட்ட ஒரு குழுவினர் தேசிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளனர்.

இந்த வருடம் செப்டெம்பர் மாதத்திற்குள் இந்த நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும், அந்தத் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலை நடத்தி அதிக வாக்குகளைப் பெறும் கட்சியுடன் இணைந்து ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் திட்டம் ஜனாதிபதியிடம் இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் எந்தவொரு தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்வை ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் சசங்க சம்பத் சஞ்சீவ ஏற்பாடு செய்திருந்தார். அதில், நாவலப்பிட்டி நகர சபையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகர சபை உறுப்பினர் திருமதி நந்தனி விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொண்டார்.

CATEGORIES
TAGS
Share This