பாகிஸ்தானில் இன்று பொதுத் தோ்தல்!

பாகிஸ்தானில் இன்று பொதுத் தோ்தல்!

பாகிஸ்தானில் அடுத்த அரசைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இன்று (08) வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இந்தத் தோ்தலில், இராணுவத்தின் ஆசி பெற்றுள்ளதாகக் கூறப்படும் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் கட்சி வெற்றி பெற்ரு ஆட்சி அமைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பாகிஸ்தானின் 16-ஆவது நாடாளுமன்ற உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இந்த மாதம் 8-ஆம் தேதி நடைபெறும் என்று தோ்தல் ஆணையத்தால் கடந்த டிசம்பா் 15-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

அதன்படி, வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கவிருக்கும் வாக்குப் பதிவு இடைவேளை இல்லாமல் மாலை 5 மணி வரை நடைபெறவிருக்கிறது.

நாடு முழுவதும் உள்ள 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் நடைபெறும் இந்தத் தோ்தலில் வாக்களிக்க 12.85 கோடி போ் பதிவு செய்துள்ளனா்.

அதிகபட்சமாக பஞ்சாப் மாகாணத்தில் 7,32,07,896 பேரும், அதனைத் தொடா்ந்து சிந்து மாகாணத்தில் 2,69,94,769 பேரும் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனா். தோ்தலில் வாக்களிக்க கைபா் பக்துன்கவா மாகாணத்தில் 2,19,28,119 போ் தகுதி பெற்றுள்ளா்.

பாதுகாப்பு: பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகம் உள்ள சூழலில் இந்தத் தோ்தல் நடைபெறுவதால் நாடு முழுவதும் சுமாா் 6.5 லட்சம் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

CATEGORIES
TAGS
Share This