யாழில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனுக்கு பிணை!

யாழில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனுக்கு பிணை!

போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவன் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் இன்றைய தினம் (07.02.2024) வழங்கப்பட்ட உத்தரவுப்படியே அவருக்கு சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸார் தன்னை தாக்கியதாக வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவனொருவரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியப் பணிமனையில் முறைப்பாடளிக்கப்பட்டதையடுத்து, அவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதன்போது, குறித்த நபர் போதைப்பொருள் பயன்படுத்தியமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், நேற்று குறித்த மாணவனை கைது செய்த வட்டுக்கோட்டை பொலிஸார் இன்றையதினம் குறித்த நபரை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதவான் குறித்த நபரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.பல்கலைக்கழக மாணவர் என்ற அடிப்படையில் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு குறித்த நபரை புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பாது தொடர்ச்சியாக கண்காணிக்கவும் உளவள ஆலோசனை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் மல்லாகம் நீதவான் எம்.கே.முகமட் கில்மி உத்தரவிட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This