யாழுக்கு வந்தடைந்த ஹரிஹரன் குழு!

யாழுக்கு வந்தடைந்த ஹரிஹரன் குழு!

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள ஹரிஹரன் இசை நிகழ்வுக்காக இந்திய பாடகர் ஹரிஹரன் உள்ளிட்ட குழுவினர் புதன்கிழமை (07) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் வெள்ளிக்கிழமை (09) நடைபெறவுள்ள இந்த இசை நிகழ்ச்சியில் தென்னிந்திய திரைப்பட பிரபலங்களான நடிகை தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, சாண்டி மாஸ்டர், புகழ், பாலா உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும் இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நடிகை ரம்பா மற்றும் நடன இயக்குநர் கலா மாஸ்டர் ஆகியோரும் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This