யாழில் தீவிபத்தில் இருவர் பலி!

யாழில் தீவிபத்தில் இருவர் பலி!

யாழ்.பருத்தித்துறை முனைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (02) அதிகாலை கடற்றொழில் உபகரண களஞ்சியசாலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மலையகத்தின் உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்தைச் சேர்ந்த வேலாயுதம் புவனேஸ்வரம் என்ற 46 வயதான ஒருவரும் மற்றும் வேலாயுதம் ரவி என்கிற 38 வயதானவருமே உயிரிழந்துள்ளனர்.

தீப்பற்றியமைக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This